×

பர்கூர் அருகே சிறுமி கடத்தல்

கிருஷ்ணகிரி, ஜூன் 4: பர்கூர் அருகே ஜெகினிகொல்லாய் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்2 படித்துள்ளார். கடந்த 1ம் தேதி நள்ளிரவு, கழிவறைக்கு செல்வதாக கூறிச்சென்ற சிறுமி, அதன்பின்னர் திரும்பி வரவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. பர்கூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரில், பர்கூர் நேரலக்கோட்டை பகுதியை சேர்ந்த வாசுதேவன் மகன் பூவரசன் (23) என்பவர் மகளை கடத்தி சென்றதாக தெரிவித்திருந்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : Bargar ,
× RELATED பர்கூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் தீ நகை, பணம் எரிந்து நாசம்