×

எழுமலை அருகே காலிக்குடங்களுடன் கிராமமக்கள் மறியல்

உசிலம்பட்டி, ஜூன் 4: பேரையூ ர்தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது மள்ளப்புரம். ஆழ்துளை போர்வெல் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் தண்ணீர் நிரப்பி இப்பகுதிக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த 5மாதங்களாக நிலத்தடிநீர் மட்டம்  குறைந்து மேற்குத்தெரு மற்றும் கிணத்தாங்கரை தெரு பகுதிகளில் பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யவில்லை. இதனால் இந்த பகுதிகளிலுள்ள பொதுமக்கள் மள்ளப்புரம் விலக்கு, புதூர், மீனாட்சி மூப்பன்பட்டி, ஆகிய பகுதிகளுக்கு சென்று டூவீலர், சைக்கிள்கள், தள்ளுவண்டிகள் மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். குடிநீர் பிரச்னை சம்பந்தமாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும், சேடபட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எழுமலை - எம்.கல்லுப்பட்டி சாலை,  மள்ளப்புரம் விலக்கில் காலிக்குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் எழுமலை இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின்மும்தாஜ், சேடபட்டி ஒன்றிய துணை வட்டாரவளர்சி அலுவலர் வடிவேல், விஏஓ அன்புசெல்வம், ஊராட்சி செயலர் சின்னச்சாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது துணைவட்டாரவளர்ச்சி அலுவலர் கூறுகையில், ஏற்கனவே இருந்த ஆணையாளர் மாற்றலாகி சென்று விட்டார். புதிய ஆணையாளர் நாளை (ஜூன் 5) பொறுப்பேற்க உள்ளார். எனவே அதன்பின்பு புதியபோர்வெல் அமைக்க திட்டப்பணிக்கான உத்தரவைபெற்று தண்ணீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், போர்வெல் அமைக்க இப்போதே இடம் தேர்வு செய்வோம் என உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : village ,cliff ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...