×

திருச்செங்கோட்டில் கிழக்கு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

திருச்செங்கோடு, மே 30:
திருச்செங்கோடு கிழக்கு பிரிவு மின்வாரிய அலுவலகம், சட்டையம்புதூர் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் இன்று (30ம் தேதி) முதல் ஓ.ராஜாபாளையம் ஊராட்சி கோழிக்கால்நத்தம் கிராமத்தில் உள்ள தனியார் கட்டிடத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட அன்னதானபட்டி, கஸ்தூரிபட்டி, மோரூர் பீட் 2, ஓ.ராஜாபாளையம், கருமாபுரம், திருமங்கலம், டி.புதுப்பாளையம், 57.கைலாசம்பாளையம், ஆன்றாபட்டி ஆகிய கிராமப்பகுதி மின்நுகர்வோர்கள், தங்கள் மின் இணைப்பு மற்றும் விபரங்களுக்கு, புதிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு செயற்பொறியாளர் பானுமதி கேட்டுக்கொண்டுள்ளார்.




Tags : East Electrical Office ,Tiruchengode ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்