×

காரைக்கால் ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

காரைக்கால், மே 30: காரைக்கால் திருநள்ளாறு சேத்தூர் பண்டாரவாடை அரசு தொடக்கப்பள்ளி பொறுப்பாசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது.காரைக்கால் திருநள்ளாறு சேத்தூர் பண்டாரவாடை அரசு தொடக்கப்பள்ளி பொறுப்பாசிரியர் செல்வராஜ். இவர், மாணவர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு பள்ளிகளின்  வெளிப்புற, உள்புறச் சுவரில் அறிவு மேம்பாட்டுக்கான கார்டூன் உள்ளிட்ட  வண்ண ஓவியங்களை வரைந்துள்ளார். இவரை பாராட்டும் விதமாக,  டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் கலை இலக்கிய மன்றம் கடந்த 26-ம் தேதி சென்னைக்கு அழைத்திருந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியருக்கு மக்கள் தேசியக் கட்சி நிறுவனர் நாராயணன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கிப் பாராட்டினார். விருதுடன் காரைக்கால் வந்த ஆசிரியரை பல்வேறு தரப்பினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பலர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


Tags : Dr. ,Karaikal Editor ,
× RELATED பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூல்...