×

ஜூன் 3ம் தேதி வழங்க ஏற்பாடு கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.4 குறைவு

க.பரமத்தி, மே30:  கொப்பரை தேங்காய் விலை ஒரே வாரத்தில் ஒரு கிலோவிற்கு ரு.4குறைந்து ஏலம் போனதால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இரு வெவ்வேறு ஒன்றிய பகுதியகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு கொப்பரை தேங்காய்க்காக நடந்த ஏலத்திற்கு சுமார் 629 மூட்டைகளில் 29132கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.78, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.86, ஏலம் போனது.

கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு ரு.4குறைந்து ஏலம் போனது இதே போல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார்  7848 கிலோ எடையுள்ள 25,579 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக ரூ.18, ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.21, ஏலம் விடப்பட்டது.  கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு ரு.2குறைந்து ஏலம் போனதால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags : Rs ,
× RELATED தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடுகிடுவென உயர்வு..!!