×

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு டெமு ரயில் இன்ஜின் பழுதால் பல மணி நேரம் தாமதமாக சென்றது

கரூர், மே 30: டெமு ரயிலில் இன்ஜின் பழுது காரணமாக பலமணிநேரம் தாமதமாக செல்வதால் பயணிகள் கடும்அவதிப்படுகின்றனர். கரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டுவந்த டெமு ரயில் கடந்த சில மாதங்களாக சேலம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் நடுவில் இன்ஜின்பொருத்தப்பட்டிருக்கும் புஷ்அனட் புல் முறையில் முன்புறமும் பின்புறமும் கேபின் மூலம் டிரைவர்களால் இயக்கப்படும், இம்முறையில் உள்ளவசதி என்னவென்றால் இஞ்சினைமாற்ற வேண்டியதில்லை. எந்த ஊருக்குசென்றாலும் அப்படியே மறுமுனையில்உள்ள கேபினுக்கு வந்து டிரைவர் இயக்குவார். கரூரில்  காலை 6.50மணிக்கு புறப்பட்டு  8.45மணிக்கு திருச்சி ஜங்ஷன் சென்று திருச்சியில் இருந்து 9.15க்கு புறப்பட்டு 11மணிக்கு மீண்டும் கரூர் வரும். இங்கிருந்து சேலம் சென்றுவிட்டு திரும்பி கரூருக்கு மாலை 3.20மணிக்கு வந்து திருச்சிபுறப்பட்டுசெல்லும். திருச்சியில் மாலை  6.15புறப்பட்டு 8.10மணிக்குவரவேண்டும். கரூர் வந்ததும் இங்கேயே மறுநாள் காலை 6.50மணிக்கு புறப்படும்வரை பார்க்கிங் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும். கடந்த சில மாதங்களாக புஷ்அன்ட் புல் முறையிலான இன்ஜின் பழுதடைந்துவிட்டது. பழுதை சரிசெய்யாமல் டீசல் இன்ஜின்பொருத்தப்பட்டு இந்த பாசஞ்சர் ரயிலை இயக்குகின்றனர். இதனால் திருச்சி, சேலம் சென்றதும்மீண்டும் திரும்பி வர இன்ஜினை மாற்றவேண்டியதிருக்கிறது. இதனால் பலமணிநேரம் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. பயணிகள் பெருத்த அவதிப்பட்டு வருகின்றனர்.

ரயில் பயணிகள்சங்கத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் கூறியது:கரூர்-திருச்சி- கரூருக்கு இயக்கப்பட்டுவந்த டெமு புஷ்அன்ட் புல் பாசஞ்சர்  ரயிலை சேலம் வரை இயக்குகின்றனர். திருச்சி சென்றதும் இன்ஜின்  மாற்றம், சேலத்தில் இருந்து திரும்பிவர இன்ஜின் மாற்றம், கரூரில் வந்து திருச்சி சென்றதும் திரும்பி வர இன்ஜின் மாற்றம் என பலமணிநேரம் காலதாமதம் ஏற்படுகிறது. கரூரில் இருந்து திருச்சிக்கு தினமும்வேலை நிமித்தமாகவும், கல்லூரிகளுக்கும் ஏராளமான பயணிகள் சென்றுவருகின்றனர். அதிலும் இரவு8.10மணிக்கு வரவேண்டிய ரயில் கரூர்வந்துசேர இரவு 11மணியாகி விடுகிறது.இதனால் தினமும் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரி செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். நள்ளிரவு வீட்டுக்குப் போய்விட்டு மீண்டும் காலையில் வந்து ரயிலை பிடிக்க ஓடிக் கொண்டி ருக்கின்றனர். பலமுறை இதுகுறித்து புகார் அளித்தும்எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது பயணிகளின் சிரமத்தை போக்குகின்ற வகையில் உரிய நேரத்தில் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Tags : pilgrims ,demolition ,
× RELATED NCERT பாடப்புத்தகங்களில், பாபர் மசூதி...