×

செடி, கொடிகளால் பலமிழந்து வரும் கப்பலூர் மேம்பாலம் ஷீரடி - மந்த்ராலயத்திற்கு மதுரையில் இருந்து சுற்றுலா ரயில்

மதுரை, மே 30: மதுரையில் இருந்து ஷீரடி மற்றும் மந்த்ராலயத்திற்கு ஜூன் 3ம் தேதி சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்திய ரயில்வே மற்றும் உணவு சுற்றுலா கழகமான ஐஆர்சிடிசி., மதுரையில் இருந்து ஷீரடி மற்றும் மந்த்ராலயத்திற்கு சுற்றுலா ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், வரும் ஜூன் 3ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், திண்டிவனம், செங்கல்பட்டு மற்றும் சென்னை எழும்பூர் வழியாக ஷீரடி செல்கிறது.

6 நாட்கள் சென்று திரும்பும், இந்தப் பயணத்தில், மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடி பண்டரிபுரம், ஆந்திராவில் உள்ள மந்த்ராலயம் சென்று வரலாம். இப்பயணத்திற்கு ஒரு நபருக்கு ரூ.5,760 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிக்க விரும்பும் பயணிகள் அதற்கான டிக்கெட் மற்றும் இப்பயணம் தொடர்பான கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ள, 9003140680, 9003140601 என்ற செல்போன் எண்களில் ஐஆர்சிடிசி. அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags : Madurai ,Shirdi - Mantralayam ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை