×

ரூ.1.78 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி, மே 30: பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில், வடக்கிபாளையம், சூலக்கல், தாளக்கரை,  ஆர்.பொன்னாபுரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 35 விவசாயிகள் மொத்தம் 49 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரைகள் அனைத்தும், முதல் மற்றும் இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

இதில், 24 மூட்டை முதல்தர கொப்பரை ஒரு கிலோ ரூ.78.65 முதல் அதிகபட்சமாக ரூ.81.45 வரையிலும். 25 மூட்டை இரண்டாம் தர கொப்பரை ஒரு கிலோ ரூ.33.15 முதல் ரூ.67.65 வரையிலும் என, மொத்தம் இரண்டரை டன் கொப்பரை ரூ.1.78 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை, 4 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என,  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை