×

இலவச தையல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

ஈரோடு,  மே 30:  ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையின் மூலமாக விதவை, கணவனால்  கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுதிறனாளி ஏழை பெண்களுக்கு மின்  மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த  பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கு  விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்துடன் வருமான சான்று, இருப்பிட சான்று, தையல்  பயிற்சி சான்று, வயது சான்று, சாதி சான்று, மனுதாரரின் புகைப்படம், விதவை,  கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுதிறனாளி பெண்  சான்று நகல், ஆதார் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை இணைக்க வேண்டும். உரிய  ஆவணங்களுடன் இலவச தையல் இயந்திரம் பெற ஈரோடு மாவட்டத்தில் உள்ள  சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வரும் ஜூன் 21ம்தேதிக்குள்  சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Tags : tailoring ,
× RELATED கம்பம் சிட்டி மேன் டெய்லரிங் சார்பாக...