×

வாகீஸ்வரர் கோயிலில் யாக வேள்வி பூஜை

பவானி, மே 30:  பவானி அருகே உள்ள பட்லூர் வாகீஸ்வரர் கோயிலில் ஸ்ரீவருண ஜப யாகவேள்வி பூஜை நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்த வேள்வியில் மழை வேண்டியும், வறட்சி நீங்கி பயிர்கள் செழித்து வளர்ந்து, விவசாயம் செழிக்கவும், அனைத்து உயிர்களும் தாகம் தீர்க்கவும் வேண்டி வழிபாடு நடத்தப்பட்டது. நந்தியம் பெருமானைச் சுற்றிலும் தொட்டி கட்டி, நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி 1008 வருண ஜபம், வருண ஹோமம் நடத்தப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ ஞானதண்டபாணி குருக்கள் தலைமையில் நடந்த இந்த யாகம் ஸ்ரீவிநாயகர் பூஜையுடன் துவங்கியது.

இதைத்தொடர்ந்து, கும்பத்தில் வருண பகவானை ஆவாஹனம் செய்து வேதிகார்ச்சனையும், நந்தியம் பெருமானுடன் சேர்ந்து நீருக்குள் அமர்ந்து ஜபம் செய்தல், மழை வேண்டி பதிகம் பாடுதல் உள்ளிட்ட வழிபாடு செய்யப்பட்டன. இதையடுத்து, வாகீஸ்வரருக்கும், சௌந்திர நாயகிக்கும் வருண தீர்த்த அபிஷேக ஆராதனை வழிபாடு நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பட்லூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Yagya Puja Puja ,Vaikiswarar Temple ,
× RELATED நெடுஞ்சாலைத்துறையினர் கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்