×

குண்டூரில் எம்எல்ஏக்கள் கூட்டம் தெலுங்கு தேசம் சட்டப்பேரவை தலைவராக சந்திரபாபு ஒருமனதாக தேர்வு

திருமலை, மே 30: தெலுங்கு தேசம் சட்டப்பேரவை தலைவராக குண்டூரில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் சந்திரபாபு நாயுடு இல்லத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை குழு தலைவராக வெற்றி பெற்ற 23 எம்எல்ஏக்கள் சந்திரபாபு நாயுடுவை ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என வதந்திகள் பரவிய நிலையில் சந்திரபாபு நாயுடுவே எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள், வருங்காலத்தில் கட்சியை எப்படி வழிநடத்தி செல்வது, விரைவில் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் கட்சி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கட்சியை வலுப்படுத்தி தேர்தலை சந்திக்கும் விதமாக தயார்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சுஜினா சவுத்ரி, கலா வெங்கட்ராவ், சின்னராஜப்பா, யனமல ராமகிருஷ்ணடு, கண்டா நிவாஸ், புஜ்ஜைய்ய சவுத்திரி, பாலகிருஷ்ணா, சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Chandrababu ,
× RELATED டெல்லியில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!