×

கும்மிடிப்பூண்டி அருகே கிரிக்கெட் விளையாட்டில் தகராறு: 5 பேர் கைது

கும்மிடிப்பூண்டி, மே 30: கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (28). இவர் அதே பகுதியைச் சேர்ந்த திருப்பதி (38), சதீஷ்குமார், ரஞ்சித் குமார்(25) ஆகியோருடன் கடந்த 4 நாட்கள் முன்பு கிரிக்கெட் விளையாடினார். அப்போது இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு  பாண்டியன் வீட்டுக்கு திருப்பதி, சதீஷ்குமார், ரஞ்சித்து ஆகிய 3 பேரும் சென்று தகராறில் ஈடுபட்டனர்.  இதனை தட்டிக்கேட்ட பாண்டியனுடைய அம்மா மல்லிகா(48) என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி  இரும்பு ராடால் அடிக்க முயன்றுள்ளனர். இதுகுறித்து மல்லிகா பாதிரிவேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இருதரப்பு புகாரையும் ஏற்ற போலீசார் இந்த தகராறில் ஈடுபட்ட  திருப்பதி, சதீஷ் குமார், ரஞ்சித் குமார், மற்றும் பாண்டியன், அவரது நண்பர் சஞ்சீவ்காந்தி ஆகியோரை பாதிரிவேடு போலீசார் கைது செய்து கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : crackdown ,cricket match ,Gummidipoondi ,
× RELATED மனைவி பிரிந்து சென்ற தகராறு...