×

மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.58.68 லட்சம்

பொள்ளாச்சி,  மே 29: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ரூ.58.68லட்சம் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியை  அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி  நேற்று நடந்தது. இதற்கு கோயில் உதவி ஆணையர் ஆனந்தன் தலைமை வகித்தார்,  ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி ஆய்வர்  மல்லிகா, புலவர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இதில்,  பக்தர்கள், தன்னார்வலர்கள் பலர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

  கோயில் வளாகத்தில் உள்ள மொத்தம் 22 பொது உண்டியல் மற்றும் 9  தட்டுக்காணிக்கை உண்டியல்களில் உள்ள காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் பொது  உண்டியல் மூலம் ரூ.44 லட்சத்து 49ஆயிரத்து 781ம். தட்டு காணிக்கை  உண்டியலில் ரூ.14லட்சத்து 18ஆயிரத்து 772ம் என மொத்தம் ரூ.58லட்சத்து  68ஆயிரத்து 553இருந்தது. மேலும் தங்கம் 29கிராம், வெள்ளி 335கிராம்  இருந்துள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.



Tags : Masanniyamman ,
× RELATED அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு