×

முதுமலை சாலையோரத்தில் காட்டு யானைகள் உலா

ஊட்டி, மே 29: முதுமலையில் சாலையோரங்களில் வலம் வரும் காட்டு யானைகளை புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், தற்போது முதுமலை புலிகள் காப்பகம் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. திரும்பும் திசையெல்லாம் பச்சை கம்பளம் விரித்தார் போல் காட்சியளிக்கிறது. இதனால், வன விலங்குகள் அதிகம் வலம் வரத்துவங்கியுள்ளன. பெரும்பாலான இடங்களில் காட்டு யானைகள் கூட்டமாகவும், ஒற்றையாகவும் வலம் வருகின்றன. காட்டு யானைகள் சாலையோரங்களில் சுற்றித் திரிவதை பார்த்தும், உணவு உட்கொள்வதை கண்டு ரசிக்க பல சுற்றுலா பயணிகள் அபாயத்தை உணராமல் வாகனத்தை நிறுத்துகின்றனர்.

 இதில் சிலர் வாகனங்களை விட்டு இறங்கி சென்று புகைப்படம் எடுப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, கூடலூர் - முதுமலை  சாலையோரங்களில் வலம் வரும் காட்டு யானைகளால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் தொடர்கிறது. எனவே, வனத்துறையினர் அடிக்கடி இச்சாலையில் ரோந்து பணிகளை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Mudumalai Road ,
× RELATED மசினகுடி - முதுமலை சாலையோரங்களில் தீ...