×

பால்குட திருவிழாவில் போலீசை தாக்கிய வாலிபர் கைது

அரியலூர், மே 29: கோவிந்தபுத்தூர் கிராமத்தில் நடந்த பால்குட திருவிழாவில் போலீஸ், ஊர்க்காவல் படையை சேர்ந்தவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா நடந்தது. அப்போது விக்கிமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அதே பகுதியை வினோதகன் (30) என்பவர் காவலர் திரிசங்குவிடம் (35) தகராறு செய்துள்ளார்.

அப்போது ஊர்காவல் படையை சேர்ந்த கார்த்திகேயன் (21), கொளஞ்சி (20), கோபி பிரகாஷ் (23) ஆகியோர் ஏன் காவலர் திரிசங்குவிடம் தகராறு செய்கிறாய் என்று வினோதகனிடம் கேட்டுள்ளனர். அப்போது தகராறு முற்றி வினோதகன், அவரது நண்பர்கள் கலைவேந்தன் (38), தங்கபாண்டி (29), வினோத் (32) ஆகியோர் திரிசங்கு, கார்த்திகேயனை திட்டி தாக்கினர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிந்து கலைவேந்தனை கைது செய்தனர். மேலும் வினோதகன், தங்கபாண்டி, வினோத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி: அரியலூர்  மாவட்டம்  திருமானூர் அருகே உள்ள பெரியமறையை சேர்ந்த விவசாயி குப்புசாமி (60). இவர் நேற்று முன்தினம் இரவு பெரியமறை பேருந்து நிறுத்தம்  அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குப்புசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குப்புசாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருமானூர் போலீசார்  வழக்குப்பதிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஏலாக்குறிச்சியை சேர்ந்த பூவரசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : festival ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!