தமிழக ஜூனியர் பூப்பந்து போட்டி தேர்வில் பங்குபெற விருதுநகர் மாவட்ட அணி தேர்வு

விருதுநகர், மே 29: தமிழக ஜூனியர் பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பூப்பந்து பட்டயப்போட்டி சேலத்தில் ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்கும் விருதுநகர் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கான தேர்வு, விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அணித்தேர்வில் சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, விருதுநகர், அருப்புக்கோட்டை, கல்லூரணியைச் சேர்ந்த 75 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். தலா 10 பேர் கொண்ட ஆண், பெண் அணி தேர்வு செய்யப்பட்டது. பட்டயப் போட்டியில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் தமிழக அணி சார்பில் மணிப்பாலில் நடைபெற உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க இருப்பதாக, விருதுநகர் மாவட்ட பூப்பந்து கழக தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Tags : Virudhunagar district ,Badminton competition ,Tamil Nadu Jr ,
× RELATED ராஜபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் எம்.பி., எம்.எல்.ஏ. ஆய்வு