×

கேண்டீனில் பொருட்கள் வாங்க விடிய, விடிய ராணுவ வீரர்கள் காத்திருப்பு

விருதுநகர், மே 28: கேண்டீனில் பொருட்கள் குறைவாக வருவதால், ராணுவ வீரர்கள் விடிய, விடிய காத்திருக்கும் பரிதாபம் நிலை ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் கல்லூரி சாலையில் ராணுவத்தினர் பொருட்கள் வாங்கும் கேண்டீன் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், இங்கு வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். ஆனால், மாதக் கடைசியில் குறைந்த அளவிலேயே பொருட்கள் வருவதாக கூறப்படுகிறது. இதனால், முன்னதாக வருபவர்களுக்கே பொருட்கள் கிடைக்கின்றன.

இந்நிலையில், நேற்று காலை பொருட்கள் வாங்குவதற்காக ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் இரவு 11 மணி முதலே வந்து காத்துக் கிடந்தனர். நேற்று காலை 10 மணிக்கு கேண்டீன் திறந்தவுடன் முண்டியடித்துக் கொண்டு பொருட்கள் வாங்கி சென்றனர். பெரும்பாலானோருக்கு பொருட்கள் கிடைக்காததால் விடிய, விடிய காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நாட்டை காக்க எதிரிகளுடன் போராடிய ராணுவ வீரர்கள், பொருட்கள் வாங்கவே போராட வேண்டியுள்ளது என வேதனை தெரிவித்தனர்.

Tags : waiter soldiers ,
× RELATED ரயில் நிலையம் புனரமைப்பு