அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி, மே 28: பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனை நடைபெற்றது. இரவு அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, ஆலவயல், அம்மாபட்டி, ஆவிகோன்பட்டி, கருமங்காடு உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பால்குடம், பூத்தட்டு எடுத்துச் சென்று வழிபாடு செய்தனர். பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Festival celebration ,Ammankurichi Mariamman Temple ,
× RELATED சக்தி மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்