×

புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் விண்ணப்பம் வழங்கல்

புதுக்கோட்டை, மே28: புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வெங்கடேஸ்ரா கல்வியியல் கல்லூரி தொடர்ந்து சாதனை படைத்துவருகிறது. 2019-20ம் ஆண்டிற்கான பி.எட்,, மற்றும் எம்.எட்., முதலாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிங்கள் மாணவ, மாணவிளுக்கு வழங்கப்பட்டது. வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் சேர்மன் கதிரேசன், கல்வியியல் கல்லூரியின் தாளாளர் கருப்பையா விண்ணப்பப் படிவத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் இளங்கோவன் மற்றும் உதவிப் பேராசிரியர் திருவள்ளுவன் மற்றும் பலர்  உடனிருந்தனர். மே மற்றும் ஜூன் 2019ல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகத் தேர்விற்கான நுழைவுச் சீட்டுகளும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags : Venkateswara College of Education ,Pudukottai ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...