×

பல்கலைக்கழங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பிஎச்.டி ஆராய்ச்சி கட்டுரைகளின் தரத்தை ஆய்வு செய்ய யுஜிசி முடிவு

திருச்சி, மே 28:  கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்ட பிஎச்.டி ஆராய்ச்சி கட்டுரைகளின் தரத்தை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது. நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து கற்பித்தல், தேர்வு மற்றும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளின் தரத்தை பராமரிக்க பாராளுமன்ற சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி). இதற்காக அவ்வப்போது புதிய, புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும், விதிகளையும் அறிவித்து வருகிறது. நாட்டில் உள்ள பல்கலைக்கழங்களில் சமர்பிக்கப்படும் பிஎச்.டி ஆராய்ச்சி கட்டுரைகளின் தரத்தை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக்குழு முடிவு செய்துள்ளது.

 கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைகள், மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைகள் மற்றும் நிகர் நிலை பல்கலைக்கழகங்களில் சமர்பிக்கப்பட்ட பிஎச்.டி ஆய்வு ஆராய்ச்சி கட்டுரைகளின் தரத்தை இந்த ஆய்வல் கண்டறிய முடியும்.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 6 மாதத்துக்குள் இந்த ஆய்வு முடிவுகளை பல்கலைக்கழக மானியக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தங்களின் தகுதி, முந்தைய செயல்பாடுகள், ஆய்வுக்கான செலவின விபரம் உள்ளிட்டவற்றை ஜூன் 10ம் தேதிக்குள் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் studyexpressiongmail.com என்ற இமெயில் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.    


Tags : UGC ,universities ,
× RELATED அரசுப்பணிகளில் சேருபவர்களின்...