×

மக்களை வாட்டி, வதைத்து சுட்டெரித்த அக்னி வெயில் நாளை நிறைவு

க.பரமத்தி, மே 28: சுட்டெரித்த அக்னி வெயில் நாளை (29ம்தேதியுடன்) நிறைவடைகிறது  கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றிய சுற்று கிராமத்தை சுட்டெரித்த அக்னி நட்சத்திரம்  நாளையுடன் முடிகிறது.  க.பரமத்தி ஒன்றியத்தில் இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் அக்னி வெயில் கொளுத்தியதால் மக்கள் பெரிதும் கலக்கமடைந்திதிருந்தனர். ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலமாக ஆண்டு தோறும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் கடுமையானது. கோடை வெயிலின் உச்சம்   என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி துவங்கியது. 10ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அக்னி அகோரமாகி அதிக பட்சமாக 95டிகிரி முதல் 104டிகிரி செல்சியஸ் வரை வெயில் மக்களை வாட்டி வதக்கி  வருகிறது. இதனால் ஒரு சில நேரங்களில் லேசான சாரல் மழை வந்தது.


இருப்பினும் இந்த நாட்களில் மக்கள் அக்னி வெயில் கொடுமை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் மக்கள்  பல்வேறு வகை குளிர் பானங்களை  அருந்தி வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு வந்தனர். மேலும் மதிய வேளைகளில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. பஸ் மற்றும் வாகனங்களில் செல்லும்போது அனல் காற்று போல் அடித்தது. இதனால் ஒன்றியத்தில் மதிய வேளைகளில் தேசிய நெடுஞ்சாலையில் ஆள் நடமாட்டம் சற்று குறைந்தே காணப்பட்டது. இரவில் ஆஸ்பட்டாஸ் ஓடு கொண்ட வீடுகளில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏற்பட்ட புழுக்கம் அனைவரையும் புரட்டி எடுத்தது. மின் விசிறி காற்றும் கூட வெப்பமாக தான் இருந்தது. 26நாட்கள் உஷ்ணத்தை கக்கிய அக்னி நட்சத்திரம் வெயில் நாளை (29ம்தேதியுடன்) முடிகிறது. வழக்கமாக அக்னி வெயில் துவங்கிய பின் அல்லது நிறைவடையும் போது மழை வரும் தற்போது மழையோ, தூறல் மழை மட்டுமே பெய்து உள்ளது. எப்போதும் அக்னி நட்சத்திரம் முடிந்ததும், தென் மேற்கு பருவ மழை வரும் தற்போது காற்று மட்டுமே வீச துவங்கிய நிலையில் அதிக மழை பெய்தால் ஒழிய வெப்பம் தணியும் என விவசாயிகள் உள்பட பலரும் எதிர்பார்க்கின்றனர்

Tags :
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை;...