×

சூளகிரி தாலுகாவில் மா விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை

சூளகிரி, மே 28:  சூளகிரி தாலுகாவில் நடப்பாண்டு மா விளைச்சல் குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சூளகிரி தாலுகாவில் உள்ள சூளகிரி, பி.எஸ் திம்மசந்திரம், காட்டுநாயக்கன்தொட்டி, பேரிகை, அத்திமுகம், நெரிகம், கும்பளம், காளிங்காவரம், மாரண்டபள்ளி, தொட்டூர், ஒட்டர்பாளையம், அணாசந்திரம், மகுதாண்டபள்ளி, எலசேபள்ளி, வெங்கடேசபுரம், காமன்தொட்டி, பாத்தகோட்டா, உத்தனப்பள்ளி, தேனதூர்க்கம், அலேசிபம், உலகம், மேலுமலை, மேடுபள்ளி, ஏனுசோனை, வேம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரங்களில் 2 ஆயிரம் ஏக்கரில் மா பயிரிடப்பட்டுள்ளது. ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மா விளைச்சல் அதிகரிக்கிறது. இந்த மாதங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களை குத்தகைக்கு விடுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மழை, வறட்சி, ஆலங்கட்டி மழை, சூறைக்காற்று உள்ளிட்டவற்றால் விளைச்சல் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒவ்வொரு ஆண்டும் வெயில், மழை என இயற்கை சீற்றங்களால் சாகுபடி குறைந்து பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. சூளகிரி தாலுகாவில் சாகுபடி செய்யப்படும் மாங்காய்கள் தர்மபுரி, சேலம், சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வாரத்திற்கு 10ஆயிரம் டன் வரை அனுப்பப்படும். ஆனால், நடப்பாண்டு 5 ஆயிரம் டன் கூட அனுப்ப முடியவில்லை. எனவே, மா விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர்.

Tags : taluk ,Sulagiri ,
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...