×

பாலக்காடு, ஆலத்தூர் தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி ஊர்வலம்

பாலக்காடு, மே 25:  பாலக்காடு, ஆலத்தூர் தொகுதிகளில் வென்ற  காங்கிரஸ் வேட்பாளர்கள் தொண்டர்களின் உற்சாக முழக்கத்திற்கிடையே  நேற்று வெற்றி ஊர்வலம் வந்தனர். கேரளாவில் நடந்த மக்களவை தேர்தலில் பாலக்காடு, ஆலத்தூர் (தனி) தொகுதிகள் உட்பட காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்  கூட்டணி வேட்பாளர்கள் 19 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளனர்.  பாலக்காடு மக்களவை தொகுதியில் வெற்றியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் கண்டன் சட்டசபை தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விபரம்:

பட்டாம்பியில் 67 ஆயிரத்து 644, ஷொர்ணுாரில் 49 ஆயிரத்து 810, ஒத்தப்பாலத்தில் 54 ஆயிரத்து 386 , கோங்காட்டில் 52 ஆயிரத்து 456, மன்னார்க்காட்டில் 78 ஆயிரத்து 250, மலம்புழாவில் 47 ஆயிரத்து 743, பாலக்காட்டில் 48 ஆயிரத்து 425 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் தபால் வாக்குகள் 560 உட்பட மொத்தம் 3 லட்சத்து 99 ஆயிரத்து 274 வாக்குகள் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் வி.கே.ஸ்ரீகண்டன், மா.கம்யூ., வேட்பாளர் ராஜேஷை விட 11 ஆயிரத்து 537 வாக்குகள் அதிகம்  பெற்றார்.

ஆலத்தூர் மக்களவை (தனி) தொகுதியில் வெற்றியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ் சட்டசபைத் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விபரம்: தரூரில் 72 ஆயிரத்து 441, சித்தூரில் 79 ஆயிரத்து 423, நெம்மாராவில் 82 ஆயிரத்து 539, ஆலத்தூரில் 73 ஆயிரத்து 120, சேலக்காராவில் 76 ஆயிரத்து 34 , குன்னம்குளத்தில் 69 ஆயிரத்து 908, வடக்காஞ்சேரியில் 79 ஆயிரத்து 28 மற்றும் தபால் வாக்குகள் ஆயிரத்து 322 உட்பட மொத்தம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 815 வாக்குகள் பெற்றார்.

காங்கிரஸ் வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ் மா.கம்யூ., வேட்பாளர் பிஜூவை விட ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். மா.கம்யூ., கட்சியின் கோட்டையாக விளங்கிய பாலக்காடு, ஆலத்தூர் இரண்டு மக்களவை லோக்சபா தொகுதிகளிலும் இம்முறை காங்கிரஸ் கட்சி வெற்றிவாகை சூடியது   குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,constituencies ,Palakkad ,Alathur ,
× RELATED சொல்லிட்டாங்க...