×

சித்தூர் மாவட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை தொகுதியில் பரபரப்பு முடிவுகள் விவரம் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள்

சித்தூர், மே 25: சித்தூர் மாவட்டத்தில் மக்களவை, சட்டப்பேரவை தொகுதியில் நோட்டாவை விட பெரும்பாலான வேட்பாளர்கள் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதம் 11ம் தேதி 175 சட்டப்பேரவை தொகுதிக்கும், 25 மக்களவை தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடந்தது. நேற்றுமுன்தினம் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 151 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் 23 இடங்களிலும் ஜனசேனா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் 2 மக்களவை தொகுதிகளிலும், 14 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்ற கட்சி வேட்பாளர்களின் விவரம் பின்வருமாறு:

1. ராஜம்பேட்டை நாடாளுமன்ற தொகுதி விவரம்: இங்கு மொத்தம் 12 லட்சத்து 24 ஆயிரத்து 354 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 21 ஆயிரத்து 339 வாக்குகள் கிடைத்தநிலையில், இந்திய முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் காதர் வலி ஷேக்குக்கு 1557 வாக்குகளே கிடைத்தது.
2. சித்தூர் மக்களவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் 13 லட்சத்து 19 ஆயிரத்து 472 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 20 ஆயிரத்து 156 வாக்குகள் கிடைத்த நிலையில், தடுகு பிரஜா கட்சி வேட்பாளர் விஷ்ணுவுக்கு 3445 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
சித்தூர் மாவட்ட சட்டப்பேரவை தொகுதி விவரம்:
1. நகரி சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 764 வாக்குகள் பதிவான நிலையில், நோட்டாவுக்கு 1688 வாக்குகள் கிடைத்தநிலையில் பாஜ வேட்பாளர் நிகிதாவுக்கு 1341 வாக்குகளே கிடைத்தது.
2. கங்காதரநல்லூர் சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 673 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 2829 வாக்குகள் கிடைத்த நிலையில் பாஜ வேட்பாளர் ராஜேந்திராவுக்கு 1547 வாக்குகளே கிடைத்தது.
3. தம்பலபல்லி சட்டப்பேரவைத் தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 269 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 2876 வாக்குகள் கிடைத்த நிலையில், ஜனதா தளம் கட்சி வேட்பாளர் வெங்கட்ரெட்டிக்கு 272 வாக்குகளே கிடைத்தது.
4. பூதலப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதி விவரம்: இங்கு மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 425 வாக்குகள் கிடைத்தது. இதில், நோட்டாவுக்கு 2103 வாக்குகள் கிடைத்தநிலையில், விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் தனஞ்ஜெயராவுக்கு 384 வாக்குகளே கிடைத்தது.
5. சித்தூர் சட்டப்பேரவைத் தொகுதி விவரம்: இங்கு மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 550 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 1340 வாக்குகள் கிடைத்த நிலையில், பாஜ வேட்பாளர் ஜெயக்குமாருக்கு 896 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
6. புங்கனூர் சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 868 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 3687 வாக்குகள் கிடைத்தநிலையில், ஜனசேனா கட்சி வேட்பாளர் ராமச்சந்திர யாதவுக்கு 138 வாக்குகளே கிடைத்தது.
7.  காளஹஸ்தி சட்டப்பேரவைத் தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 994 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 1669 வாக்குகள் கிடைத்தநிலையில், பிரமிடு கட்சி வேட்பாளர் சத்யநாராயணாவுக்கு 108 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
8. சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 781 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 2411 வாக்குகள் கிடைத்தநிலையில், விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபுவுக்கு 175 வாக்குகளே கிடைத்தது.
9. மதனபல்லி சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 830 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 1636 வாக்குகள் கிடைத்தநிலையில், பிரமிடு கட்சி வேட்பாளர் நாகபூஷணத்திற்கு 171 வாக்குகளே கிடைத்தது.
10. சத்தியவேடு சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 114 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 3,346 வாக்குகள் கிடைத்தநிலையில், விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் பிரபுவுக்கு 312 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
11. குப்பம் சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 499 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 2905 வாக்குகள் கிடைத்தநிலையில், விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் கணேஷ் 661 வாக்குகளே பெற்றார்.
12. திருப்பதி சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 429 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 1420 வாக்குகள் கிடைத்த நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் வெங்கடரமணாமவுக்கு 102 வாக்குகள் கிடைத்தது.
13. பீலேர் சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 447 வாக்குகள் பதிவானது. இதில் நோட்டாவுக்கு 2145 வாக்குகள் கிடைத்த நிலையில், இந்திய முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் அன்வர் உசேனுக்கு 195 வாக்குகளே கிடைத்தது.
14. பலமனேர் சட்டப்பேரவை தொகுதி விவரம்: இங்கு மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 957 வாக்குகள் கிடைத்தது. இதில் நோட்டாவுக்கு 2561 வாக்குகள் கிடைத்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சீனிவாசலு 393 வாக்குகளே பெற்றார்.

அதன்படி, 14 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகளில் பாஜவுக்கு 3 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 இடங்களிலும், இந்தியன் முஸ்லிம் லீக், பிரமிடு கட்சிகளுக்கு தலா 2 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு 3 இடங்களிலும் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர்.

Tags : Chittoor district ,constituency ,Lok Sabha ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...