×

ஆதரவற்ற சிறுமி உயர்வகுப்பு படிக்க அனுமதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆதரவற்ற இல்லத்தில் வசித்த ஒடிசா மாநில சிறுமிக்கு 11ம் வகுப்பு படிக்க குழந்தைகள் நலக்குழுமம் கேட்டுக் கொண்டதன் பேரில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 2017ம் ஆண்டு காஞ்சிபுரம் அருகே ஆர்பாக்கத்தில் செயல்படும் தனியார் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்தில் தங்கி படித்து வந்தார். 10ம் வகுப்பு வரை படித்த சிறுமி, 11ம் வகுப்பு படிக்க செங்கல்பட்டில் இயங்கும் குழந்தைகள் நலக்குழுமத்தினரிடம், இல்லத்தின் நிர்வாகி சோபியா செல்லத்துரை கேட்டுக் கொண்டார். அதன்படி, குழந்தைகள் நலக்குழுமம் சிறுமி விரும்பிய பள்ளியில் சேர அனுமதியளித்தது. இதையடுத்து, பெரிய காஞ்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று விண்ணப்பித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா, சிறுமிக்கு 11ம் வகுப்பில் படிக்கும் அனுமதி கடிதம் வழங்கினார். அப்போது,குழந்தைகள் நலக்குழும உறுப்பினர் சக்திவேலு உடன் இருந்தார்….

The post ஆதரவற்ற சிறுமி உயர்வகுப்பு படிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Children's Welfare Group ,Odisha ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...