×

நியூசி.யில் 7 பேருக்கு கத்திக்குத்து சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர் ஐஎஸ் ஆதரவு இலங்கை தமிழர்

கொழும்பு: நியூசிலாந்ததின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் நேற்று முன்தினம் நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர், அங்கிருந்த ெபாதுமக்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து, அங்கு சென்ற போலீசார் தப்ப முயன்ற அந்த வாலிபரை சுட்டுக்கொன்றனர். படுகாயமடைந்தவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட நபர் இலங்கையை சேர்ந்தவர் என நியூசிலாந்து அரசு அறிவித்த நிலையில், அவர் யார் என்பது குறித்து இலங்கை போலீசார் நேற்று அடையாளத்தை வெளியிட்டனர். இலங்கை மட்டக்களப்பின் கிழக்கு மாவட்டம் காத்தான்குடியைச் சேர்ந்த அகமது ஆதில் முகமது சம்சுதீன் (32) என்பவர்தான் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை போலீசார் கூறி உள்ளனர். தமிழரான சம்சுதீன், கடந்த 2011ல் மாணவர் விசாவில் இலங்கையிலிருந்து நியூசிலாந்திற்கு வந்தார். கடந்த 2017ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ்-க்கு போராட சிரியா செல்வதற்காக, சிங்கப்பூர் செல்ல விமான டிக்கெட் வைத்திருந்தபோது ஆக்லாந்து விமான நிலையத்தில் சம்சுதீன் கைது செய்யப்பட்டார். அப்போதில் இருந்து அவர், நியூசிலாந்து பாதுகாப்பு அமைப்பினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்துவந்தது தெரியவந்துள்ளது….

The post நியூசி.யில் 7 பேருக்கு கத்திக்குத்து சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர் ஐஎஸ் ஆதரவு இலங்கை தமிழர் appeared first on Dinakaran.

Tags : Newsi ,US ,Colombo ,ISIS ,New Zealand ,Auckland ,
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது