×

உளுந்து விதைப்பண்ணை செயல்விளக்க முகாம் ஆய்வு

பாபநாசம், மே 23: பாபநாசத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள உளுந்து விதைப்பண்ணை, மண்புழு உர உற்பத்தி செயல்விளக்கம், தக்கைப்பூண்டு விதை உற்பத்தி செயல்விளக்கம், உயிரியல் காரணிகள் உற்பத்தி செயல்விளக்கத்தை தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் ஜஸ்டின் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது அமைக்கப்பட்டுள்ள செயல்விளக்கங்களால் விவசாயிகள் அடைந்த பயன்களை  ஜஸ்டின் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின்கீழ் புத்தூர் ஏரியை ஆழப்படுத்தும் பணி நடந்த பின்பு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். உயிரியல் காரணி மையத்தில் உற்பத்தி செய்யப்படும் டிவிரிடி உயிர் காரணியை விவசாயிகள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி மற்ற விவசாயிகளுக்கும் வினியோகம் செய்ய வேண்டுமென துணை இயக்குனர் தெரிவித்தார்.வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா, வேளாண் அலுவலர் ராஜதுரை, உதவி அலுவலர் சூரியமூர்த்தி, வரதராஜன், குமரன் உடனிருந்தனர்.


Tags : Nutrient Seedling Demonstration Camp ,
× RELATED வானம் மேகமூட்டம், திடீர் மழையால்...