300 காளைகள் பங்கேற்பு நரிக்குடி அருகே இளம்பெண் மாயம்

திருச்சுழி, மே 23:நரிக்குடி அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நரிக்குடி அருகே உள்ள உவர்குளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் தேவிகா (18). இவர் திருப்பூரில் சில வருடங்களாக தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் தனது சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்துள்ளார். பின்னர் வீட்டில் ஆளில்லா நேரத்தில் திடீரென்று காணாமல் போனதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு தங்களது உறவினர்கள் வீட்டில் தேடிப்பார்த்து கிடைக்காததால் நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED நல்லமிளகு விலை கிலோ 300 ஆக சரிவு