×

பவானிசாகர் பகுதியில் ரூ.8 கோடி நிதி ஒதுக்கியும் கிடப்பில் கிடக்கும் பாலம்

சத்தியமங்கலம், மே 22:  பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே, உள்ள பாலம் சேதமடைந்து, ஓட்டை விழுந்ததால் பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, கடந்த 2018 ஏப்ரல் மாதம் முதல் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. பாலம் மூடப்பட்டுள்ளதால், புங்கார், பெரியார்நகர், காராச்சிக்கொரை, கொத்தமங்கலம், புதுபீர்கடவு, பட்ரமங்கலம் மற்றும் தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட  கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், பல கிலோ மீட்டர் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில், பவானிசாகர் புதிய பாலம் அமைக்கும் பணிக்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கி, கடந்த மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் துவங்கவில்லை. இதனால் 10 கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நெடுஞ்சாலைத்துறை விரிவான சாலை உள்கட்டுமான மேம்பாட்டு திட்டத்தில் ரூ.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டெண்டர் விடும் பணிகள் முடிந்துள்ளன. மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் விதிமுறைகள் தளர்த்திய பின் டெண்டர் திறக்கப்பட்டு புதிய பாலம் கட்டுமான பணிகள் தொடங்கும்,’’ என்றனர்.

Tags : bridge ,area ,Bhavani Sagar ,
× RELATED பாம்பன் சாலை பாலத்தில் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதம்