×

10 கிராம மக்கள் குமுறல் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்க துண்டு பிரசுரங்கள் வழங்கல்

காளையார்கோவில், மே 22: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) 2019-2020 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு) ஆசிரிய, ஆசிரியர்கள் பள்ளியின் சிறப்புகளையும் அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக காளையார்கோவில் பகுதியில் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்கப் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் ஒலி பெருக்கி மற்றும் மாவட்ட தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிகளவில் கூடக்கூடிய வாரச்சந்தையில் பள்ளி ஆசிரியர்கள் மூலம் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் முத்துநகை, நிர்மலாதேவி, விஜயஅரசி, செசிலியா செல்வி, சாந்தி, ஜோதி, ரேணுகா, மல்லிகா, சகாயமேரி, தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன் தொடக்கப்பள்ளி (கிழக்கு) முயற்சியால் முதல் வகுப்பிற்கு 45 மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள்.

Tags : Kudal Govt ,
× RELATED மஞ்சுவிரட்டு நடத்திய 6 பேர் மீது வழக்கு