×

செம்பனார்கோவில் பகுதிகளில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி திறப்பு

செம்பனார் கோவில், மே22: நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடைகளுக்கு கோடைவெய்யில் தாக்கம் குறைய கால்நடைகளுக்கு தண்ணீர்தொட்டி அமைக்க மண்டல இணை இயக்குனர் சுமதி அறிவுறுத்தலின்படி செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளான ஆக்கூர், திருக்கடையூர், பொறையார், சங்கரன்பந்தல், நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் சிகிச்சைக்கு வரும் கால்நடைகள் கோடை வெப்பம் தணிய தண்ணீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செம்பனார்கோவில் கால்நடை உதவி மருத்துவர் அன்பரசன் கூறுகையில்: கால்நடை வைத்திருப்போர் கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் கால்நடைகளை வெய்யிலில் கட்டி வைக்காமல் குளிர்ந்த காற்றோட்டம் கூடிய இடத்தில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கால்நடைகளுக்கு தொற்றுநோய்போல் ஏதாவது கண்டால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும். மேலும் செம்பனார்கோவில் கால்நடை மருத்துவமனையில்  கால்நடைகளுக்கு தாதுஉப்புகளும் வழங்கப்பட உள்ளது அதனால் பொதுமக்கள் கோடை காலம் முடியும் வரை முறையாக கால்நடைகளை பராமரிக்க வேண்டும் என அறிவுறித்தினார்.


Tags : Water tank opening ,
× RELATED உடன்குடி செம்புலிங்கபுரத்தில் குடிநீர் தொட்டி திறப்பு விழா