×

வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் செய்யும் பணி தீவிரம்

கோவை, மே21: கோவை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் மே 23ம் தேதி எண்ணப்படுகிறது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவான 2,504 மின்னனு வாக்கு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் 6 ஸ்டாரங்க் அறையில் 24 மணி நேரமும் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.  மே 23ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இந்த வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கு கோவை மக்களவை தொகுதிக்கு 300 அரசு ஊழியர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர்.

அதே சமயம் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், அரசியல் கட்சி ஏஜெண்டுகள் வாக்குகள் எண்ணுவதை பார்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் வசதிகள், அடிப்படை வசதிகளான மின்விசிறி, மின்சாரம், குடிநீர், கழிவறை மற்றும் தற்காலிக உணவு விடுதி ஆகியவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாக்கு எண்ணும் மையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதம் உள்ள பணிகள் புதன்கிழமைக்குள் நிறைவடையும்,’’ என்றார்.

Tags : vote count center ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் போதையில்...