3 பேருக்கு குண்டாஸ்

திண்டுக்கல், மே 21: வேடசந்தூர் அருகே அரிவாள்களை காட்டி வழிப்பறி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஆதித்யா கார்த்திக் (20) அசோக்குமார் (19) விஜய பாண்டியன் (20). இவர்கள் 3 பேரும் சேர்ந்து திண்டுக்கல் - வேடசந்தூர் 4 வழிச்சாலையில் வாகனங்களில் சென்றவர்களிடம் அரிவாள்களை காட்டி பணம் செல்போன்களை வழிப்பறி செய்ததாக வேடசந்துர் போலீசார் கைது செய்தனர் இந்நிலையில் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் பரிந்துரையின் கீழ் மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவில் வழிப்பறி செய்த 3 பேர்களையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Stories:

More
>