×

மதுரை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட வாலிபர் சாவு மருத்துவர்கள் அலட்சியம் என பெற்றோர் புகார்

மதுரை, மே 21: மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்த மோசஸ்காந்தி- ரெமிஜா தம்பதி மகன் பகத்சிங் (21). கார் டிரைவர். இவர், கடந்த வாரம் டூவீலரில் விபத்தில் சிக்கி, இரண்டு கால்களின் தொடை எலும்புகள் முறிந்தன. உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. கால் எலும்புகள் முறிந்த நிலையில், பகத்சிங்குக்கு உடனடி அறுவை சிகிச்சை செய்யாமல், ஒரு வாரம் தாமதித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அறுவை சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது, திடீரென ரத்தக்குழாய் வழியாக துகள்கள் பரவி இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்ட பகத்சிங் சிகிச்சை பலனின்றி இறந்தார். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே பகத்சிங்கின் மரணத்துக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘ஒரு வாரமாக கால் உடைந்த நிலையில் இருந்த எங்கள் மகன் திடீரென இறந்தது அதி்ர்ச்சியளிக்கிறது. என்னதான் நடந்தது? ஏன் அறுவை சிகிச்சைக்கு தாமதம் செய்தனர்? அறுவை சிகிச்சை அரங்கில் நடந்தது என்ன? டாக்டர்கள் முன்பே அறிந்து தடுக்காமல் போனது ஏன்?’ என்றனர்.

Tags : Parents ,deaths ,Government hospital ,Madurai ,
× RELATED அரசு ஆஸ்பத்திரியில் வெப்ப அலை விழிப்புணர்வு