×

3 வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி மாபெரும் கூட்டம்: சாரை சாரையாக புறப்பட்ட விவசாயிகள்

முசாபர்நகர்: 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தின் வலிமையை உணர்த்தும் வகையில் முசாபர் நகரில் இன்று கிஷான் மகா பஞ்சாயத்தை நடத்துகின்றனர். ஒன்றிய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் உள்ள ஆதரவை வெளிக்காட்டும் விதமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மீது உத்திரபிரதேசம் வழக்குகள் போடுவதை எதிர்த்தும் உத்திரபிரதேச மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் மாபெரும் கிஷான் மஹா பஞ்சாயத்து பொதுக்கூட்டத்தை இன்று விவசாயிகள் நடத்துகின்றனர்.நாடு முழுவதும் 15திற்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் ந்த கிஷான் மஹா பஞ்சாயத்தில் பங்கேற்கின்றனர். கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிக பிம்மாண்டமாக இந்த கூட்டம் நடைபெறும் என்றும் 500 சமுதாய உணவுக்கூடங்கள் 100 மருத்துவ முகாம்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்யுக் கிஷான் மோட்ஸா தெரிவித்துள்ளது. இதற்காக சாரை சாரையாக முசாபர் நகரை நோக்கி விரைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது உத்தரப்பிரதேச அரசு போட்ட வழக்குகளை செப்டம்பர் 8ஆம் தேதிக்குள் திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் நிபந்தனை விதித்துள்ள நிலையில் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது….

The post 3 வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி மாபெரும் கூட்டம்: சாரை சாரையாக புறப்பட்ட விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : 3 ,Muzaffarnagar ,Kishan Maha ,Muzaffar Nagar ,
× RELATED கஞ்சா போதையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தாக்கி பணம் பறித்த 3 பேர் கைது