×

நெடுவாசல் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பெரம்பலூர், மே 21: நெடுவாசல்  மகா மாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான  பக்தர்கள் வடம் பிடித்து தேர்  இழுத்தனர். பெரம்பலூர் மாவட்டம்  நெடுவாசல் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று  நடந்தது. இதையொட்டி கடந்த 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினம்தோறும் இரவு  சுவாமி வீதியுலா நடந்தது. 19ம் தேதி மாவிளக்கு பூஜை நடந்தது. விழாவின்  முக்கியநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. வடம் பிடித்து பக்தர்கள் தேர்  இழுத்தனர். நெடுவாசல் மட்டுமன்றி கல்பாடி, எறையூர், எறையசமுத்திரம்,  அய்யலூர், பெரம்பலூர், சிறுவாச்சூர், கவுல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்  பக்தர்கள் பங்கேற்றனர்.
நெடுவாசல்  கிராமத்தில் முக்கிய தெருக்களில் இழுத்து செல்லப்பட்ட தேர் மாலையில்  மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது. இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா  நிறைவடைகிறது.


Tags :
× RELATED பாடாலூர் செல்போன் கடையில் திருட்டு