×

அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் திமுக வேட்பாளர் சண்முகையா உறுதி

ஓட்டப்பிடாரம், மே 17: ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவேன் என்று திமுக வேட்பாளர் சண்முகையா உறுதியளித்து உள்ளார். ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா, நேற்று அக்கநாயக்கன்பட்டி, கொடியன்குளம், பூவாணி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: நானும் என் மனைவியும் ஓட்டப்பிடாரம் யூனியன் கவுன்சிலராக இருந்தபோதும், யூனியன் சேர்மனாக இருந்த என் மனைவி சுகிர்தாவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் நிலவிய குடிநீர் பிரச்னைகளை தீர்த்து வைத்து இருக்கிறோம்.

எனவே நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். வெற்றி பெற்றதும் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவேன், என்றார். வேட்பாளருடன் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் திமுக கிளை நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Tags : Shanmugha ,DMK ,facilities ,villages ,
× RELATED தேனி எம்பி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்