×

தொட்டபெட்டா சாலை சீரமைப்பு பணி துவக்கம்

ஊட்டி, மே 17: தொட்டபெட்டா செல்லும் சாலை சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர். ஊட்டி தொட்டபெட்டா சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதற்கிடையே மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் வனத்துறை அதிகாரிகள் தொட்டபெட்டா சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார்.

இதனை தொடர்ந்து சாலை சீரமைப்பிற்காக ரூ.1.08 ேகாடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சாலை சீரமைப்பு பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், சிமென்ட், எம்.சாண்ட், ஜல்லி கலந்த மண் கொட்டப்பட்டு பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சிக்கு பின்பு முழுமையாக தார் சாலை அமைத்து சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதனிடையே சாலை சீரமைப்பு பணிகள் காரணமாக நேற்றும், இன்றும் சுற்றுலா பயணிகள் அந்த சாலை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நடந்து செல்லவும் அனுமதிக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Tags : Dodabetta ,
× RELATED தொட்டபெட்டா முதல் கட்டபெட்டு வரை 16...