×

பேரூராட்சிப்பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை

கோவை மே 17: கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து பேரூராட்சிப்பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படாத தகவல் பரவிவருகின்றது, சொத்து வரியில் உயர்வோ மாற்றமோ ஏதும் செய்யப்படவில்லை என பேரூராட்சிகளில் உதவி இயக்குநர் துவாரகநாத்சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘‘கோவை மாவட்டத்தின் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்துக்களுக்கு சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படாத மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவி வருகின்றது. கோவை மாவட்ட  பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் சொத்துவரி உயர்வு தொடர்பாக நாளிதழ்களுக்கோ, ஊடகங்களுக்கோ எவ்வித செய்தியோ, அறிவிப்போ தற்சமயம் வழங்கப்படவில்லை. ஆகையால் பொதுமக்கள் இதுபோன்ற அறிவிக்கப்படாத தகவல்களை நம்பவேண்டாம், நடப்பில் உள்ள சொத்து வரித் தொகையே தற்போதும் தொடரும்.’’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : panorama areas ,
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை