×

மூணாறில் குடியிருக்க வீடுகள் கேட்டு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் தர்ணா

மூணாறு, மே 16: மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் நிலங்கள் மற்றும் வீடுகள் வேண்டும் என்று வலியுறுத்தி தொழிலாளர்கள் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மூணாறு மற்றும் சின்னக்கானல் பகுதிகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடும் நிலமும் தர கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஹைரேஞ் தோட்ட தொழிலாளிகள் சங்கமான சி.ஐ.டி.யூ. தலைமையில் சின்னக்கானல் கிராம அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.கே.ஜெயச்சந்திரான் துவங்கி வைத்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய வாக்குறுதியாக அனைத்து தொழிலாளர்களுக்கு வீடு தரப்படும் என்றும் இதுகுறித்து முக்கிய தொழில் சங்ககளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறியபடி இந்த பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று செயலாளர் கூறினார். சின்னக்கானல் பகுதியில் தொழிலாளர்கள் குடில் கட்டி போராட்டம் நடத்தி வந்த நிலையில் மாவட்ட துணை ஆட்சியர் இந்த விஷயத்தில் துணை ஆட்சியர் தலையிட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக சில முடிவுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சின்னக்கானல்-சூரியநல்லி பகுதி தொழிலாளர்கள் 1000 பேர் ஓன்று சேர்ந்து தங்களுக்கும் 5 சென்ட் நிலம் வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்து நடைபெற்ற இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தேவிகுளம் பகுதியில் குட்டியார் வாலி பகுதியில் 2006ம் ஆண்டு கேரள அரசு 700 பேருக்கு நிலங்கள் தந்துள்ளது. இதுபோல சூரியநல்லி-சின்னக்கானல் பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கும் வீடு இல்லாதவர்களுக்கும் வீடு மற்றும் நிலங்கள் அரசு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயலாளர் ராஜூ கூறியுள்ளார். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் ஏரியா செயலாளர் என்.பி.சுனில் குமார், வி.எஸ்.அல்பின், சேனாபதி சசி, முத்துராஜ், வேலுசாமி, அழகர், போன்றோர் இந்த போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.

Tags : CIDU ,Munnar ,union ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு