×

கம்பம் நகராட்சியில் திறந்த வெளியில் குப்பைகளை அள்ளிச் செல்வதால் நோய் பரவும் அபாயம்

கம்பம், மே 16: கம்பம் நகராட்சியில் திறந்தவெளியில் குப்பைகளை அள்ளிசெல்வதால் நோய்கள் பரவிடும் ஆபத்து உண்டாகி உள்ளது. கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கின்றனர். தினமும் நகராட்சியின் பல்வேறு தெருக்களிலும் குப்பைகள் மலைபோல் குவிகின்றன. இதனை அள்ளுவதற்கென்றே நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள், சுகாதாரத்துறை செயல்படுகிறது. ஆனால் நகரில் அள்ளப்படும் குப்பைகள் முறையாக சென்று சேருகிறதா என்பதை யாரும் கண்காணிப்பதில்லை. குறிப்பாக குப்பை லாரிகள், டிராக்டர்கள் போன்றவற்றில் அள்ளி செல்லும்போது இதனை மூடிவைத்துதான் கொண்டு செல்லவேண்டும். ஆனால் திறந்த வெளியில் ஊர் முழுவதும் சிதற சிதற கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் அள்ளப்பட்ட குப்பைகள் நகரில் மீண்டும் கோலம் போடுவதுபோல் செல்கிறது. இதனை அள்ளுவதற்கு சரியான முறை பின்பற்றப்படவில்லை. இதனால் நகரில் உள்ள மக்கள் அவதிடைகின்றனர். நோய்கள் பரவிடும் ஆபத்து உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கம்பம் நகராட்சியில் குப்பை லாரிகள், டிராக்டர்கள் திறந்தவெளியில் பயணிக்கின்றன. இதனை சரியாக பயன்படுத்த வேண்டிய நகராட்சி சுகாதாரத்துறை கண்காணிப்பதில்லை. இதனால் நோய்கள் பரவிடும் ஆபத்து அதிகரித்துள்ளது. குப்பைகளை முறையாக மூடி பாதுகாப்புடன் எடுத்துச்செல்ல வேண்டும்’ என்றனர்.

Tags : municipality ,Cumbum ,
× RELATED காரியாபட்டி பேரூராட்சியில் வளர்ச்சி...