×

முகூர்த்த நாளை முன்னிட்டு வாழை இலை கட்டுகள் விலை உயர்வு

ஆண்டிபட்டி, மே 16: வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு வாழை இலை கட்டுகளின் விலை உயர்வால் ஆண்டிபட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாழை மரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதி விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளது. புள்ளிமான்கோம்பை, அணைக்கரைப்பட்டி, கன்னியமங்கலம் சீரெங்கபுரம், கோவில்பட்டி, குன்னூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர். விளைந்த வாழைத்தார், இலைகட்டுகளை தயார் செய்து ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழை இலை கட்டின் விலை ரூ.300க்கு மேலும் வாழை தாரு ரூ.100க்கு மேல் விற்பனைக்கு சென்றது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு வாழையிலை கட்டு ஒன்று ரூ.1500 லிருந்து ரூ.2000க்கும், வாழைக்காய் தார் ஒன்று ரூ.300க்கு மேல் சந்தையில் விற்பனையாகிறது. மேலும் முகூர்த்த நாள் என்பதால் வாழை மரங்களுக்கு படுகிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கூறுகையில், ‘வைகாசி முகூர்த்த நாளை முன்னிட்டு, தற்போது வாழை இலை கட்டு, வாழை மரங்கள், வாழைத்தார்களின் விலை சிறிது உயர்ந்துள்ளது. மேலும் விஷேச வீட்டுக்காரர்கள் வாழை மரங்கள், இலைக்கட்டுகள் வேண்டும் என்று எங்களை தேடி வந்து முன் பணம் கொடுத்துச் செல்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார்.

Tags :
× RELATED காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனையில்...