×

கெட்டுப்போன தண்ணீர் கொடுத்ததால் மளிகை கடையை கல்வீசி தாக்குதல் குடிமகன் கைது

திருச்சி, மே 16:  திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை ரோடு மறைமலைஅடிகளார் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(42). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். கடை அருகே மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் மது வாங்கிக்கொண்டு ஹரி கிருஷ்ணன் கடைக்கு வந்து தண்ணீர் பாக்கெட் வாங்கினார். சற்று தூரம் சென்ற அவர் மதுவில் தண்ணீரை கலந்துவிட்டு மீண்டும் கடைக்கு வந்து கெட்டு போன தண்ணீர் பாக்கெட் தந்ததால் மது வீணாகிவிட்டதாகவும், பதிலுக்கு பணம் தரும்படி கூறி தகராறில் ஈடுபட்டார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.  இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கடைக்குள் சரமாரி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார். இதில் கடையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. கடையிலிருந்த கண்ணாடி பெட்டிகள் உடைந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முனீஸ்வரனை(21) கைது செய்தனர்.


Tags : Citizen ,attacker ,grocery store ,
× RELATED ஜனநாயகத்தை பாதுகாக்க வாக்களிப்பது...