×

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் 23ல் தேரோட்டம்

பெரம்பலூர்,மே16:      பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. சிலப்பதிகார காலத்தில் தவறான அரசநீதியால் கணவனை இழந்த ஆத்தி ரத்தில் மதுரையை எரித்த கண்ணகி, சுற்றித் திரிந்துவந்த நிலையில் சிறுவாச்சூரில் வந்துதங்கி இளைப்பாறியபோது சினம் தனிந்ததாகக் கூறப்படுகிறது. கண்ணகியின் சினம் தனித்த ஸ்தலமாகவும், ஆதிசங்கரர் வழிபாடு செய்ததும், ஊமையும், செவிடும் நீக்கும் சக்திநாயகியாய் நின்று அருளுவதும், மலடுநீக்கி மக்கட்பேறு அளிக்கும் வரப் பிரசாத அன்னையாய் சிறந்துநிற்பதும், பேய், பிசாசு, ஏவல், பில்லி, சூனியம் போன்ற வற்றின் இடர் அகற்றுவதுமான இனிய சக்திதெய்வமாய் விளங்கும் மதுரகாளியம்மன் குடி கொண்டுள்ள இந்தக்கோயிலின் தேரோட்டம் வரும் 23ம்தேதி நடக்கிறது.


இதனையொட்டி கடந்த 7ம்தேதி பூச்சொரிதழ்விழா இரவு 11மணிக்குத் தொடங்கி 8ம்தேதிகாலை 10மணிவரை விமரிசையாக நடந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 14ம்தேதி (செவ்வாய்க்கிழமை) காப்புகட்டுதல் நடைபெற்றது. இதனையொ ட்டி 14ம்தேதி நள்ளிரவு 12மணிக்கு சிறுவாச்சூருக்கு மேற்கேயுள்ள  பெரிய சாமி மலையில் குடிகொண்டுள்ள   செல்லியம்மனுக்கு காப்புகட்டப்பட்டது. பின்னர் நேற்று(15ம்தேதி)அதிகாலை 4மணிக்கு  மதுரகாளியம்மனுக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர் முரு கையா, மதுரகாளியம்மன் திருக்கோவில் செயல்அலுவலர் பாரதிராஜா மற்றும் சிறு வாச்சூர் கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று 15ம்தேதி சந்தி மறித்தல் நடந்தது. இன்று(16ம்தேதி)குடிஅழைத்தல், நாளை 17ம்தேதி சிவவழிபாடு, 18ம்தேதி பெருமாள் வழிபாடு, 19ம்தேதி மாரியம்மன் வழிபாடு, 20ம்தேதி அய்யனார் வழிபாடு, 21ம்தேதி மலைவழிபாடு, 22ம்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. 23ம்தேதி திருத்தேர் வடம்பிடித்தல் நடக்கிறது.

Tags : Madurakaliyamman ,
× RELATED கோயில் திருப்பணிக்காக அனுமதியின்றி...