×

பயோ மெட்ரிக் வருகை பதிவேடு பெரம்பலூர் ஆசிரியர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி 98 பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்பு

பெரம்பலூர், மே.16: பெரம்பலூரில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு குறித்த 2 ம் கட்ட பயிற்சியில் 98 பள்ளிகளைசேர்ந்த தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4ஆண்டுகளாக பரீட்சார்த்த முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டு வந்த ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, நடப்பாண்டு ஜூன்மாதம்முதல் நேரடியாக நடைமுறைக்கு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதன் முறையாக மாவட்டம் முழுமைக்கும் மின்ஆளுமைத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனையொட்டி தமிழகத்தில் முதல்முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் பரீட்சார்த்த மாக பள்ளிஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறிப்பிட்ட சில பள்ளிகளில் தொடங்கப்பட்டாலும் ஆன்லைன் குள றுபடி, பயிற்சிபெற்ற ஆசிரியர்களுக்குக்கூட கையாளத் தெரியாதது போன்றக் காரணங் களால் முழுமையாக வெற்றிபெறாமல் இருந்துவந்தது. இருந்தும் அடுத்தகட்டமாக ஆஃப்லைன்மூலம் பள்ளி மாணவர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறையும் பெரம்பலூர் மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக நடைமுறைபடுத்தப்பட்டது.


இதற்காக பள்ளிக்கல்வித் துறை சார்பாக வழங்கப்பட்ட சாப்ட்வேர் டிவைஸ் மூலம் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை குறிப்பிட்ட சிலபள்ளிகளில் மட்டும் நடைமுறையில் இருந்துவந்தது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக பள்ளி ஆசிரியர்களுக்கு தொடங்கப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை தற்போது தமிழகஅளவில் நடப்பு கல்வியாண்டுமுதல் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி ஆன்லைன்மூலம் ஆசிரியரின் வருகைப் பதிவை ஆதார்எண்கள் உதவியுடன் பதிவுசெய்யும் முறை ஜூன்மாதம் முதல்  நடைமுறைக்கு வரஉள்ளது.


அதாவது ஆதார் எனேபில்டு பயோமெட்ரிக் அட்டெண்டென்ஸ் சிஸ்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு ஜூன் மாதம்முதல் தமிழக அளவில் நடைமுறைக்கு வரஉள்ளது. இதில் ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறைக்கு ஆசிரியர்களின் ஆதார்எ ண்கள் கட்டாயம் தேவையாகும். ஆதார்எண்களை சரியாக பதிவுசெய்யாவிட்டால் ஆசிரியர்கள் தங்களது வருகையைப் பதிவுசெய்ய முடியாது. இதனையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 98 அரசுப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், கணினிஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு முதல்கட்ட சிறப்புப் பயிற்சிவகுப்பு பெரம்பலூர் அரசுமேல்நிலைப் பள்ளிவளாகத்தில் கடந்த 6ம்தேதி நடந் தது.
இந்நிலையில் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 2ம்கட்டமாக பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறைகுறித்தும் இஐஎம்எஸ் எனப்படும் கல்விமேலாண்மை தகவல்மையம் குறித்தும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 98 அரசுப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசுஉதவிபெறும் பள்ளிக ளைச்சேர்ந்த தலைமைஆசிரியர்கள், கணினிஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையில் எவ்வாறு வருகையைப் பதிவுசெய்வது, ஆன்லைன் குளறுபடிகளை எவ்வாறு சமாளிப்பது என்பதுகுறித்துப் பயிற்சியாளர் மூலம் செயல் விளக்கத்துடன் சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்தப் பயிற்சிமுகாமினை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருளரங்கன் தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை மாவட்டக் கல்விஅலுவலர்கள் வேப் பூர் குழந்தைராஜன், பெரம்பலூர் மாரிமீனாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : teachers ,phase ,Perambalur ,
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...