×

செங்குளத்தில் தடை மீறி மண் ரோடு

கோவை, மே 15: கோவை குனியமுத்தூர் செங்குளத்தின் அருகே குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 270 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக ஜல்லி, சிமெண்ட், மணல் எடுத்து செல்ல குளத்தின் மைய பகுதியில் மண் கொட்டி ரோடு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளமான இடத்தில் ஜேசிபி மூலமாக மண் கொட்டி மேடாக மாற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது.

அந்த பகுதி மக்கள் குளத்தை மூடி மேடாக்கி மண் ரோடு அமைத்தது தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் ஒப்பந்த நிறுவனம், பதில் தர மறுத்து விட்டது. பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அமைப்பின் ஒப்புதல் பெறாமல் குளத்தில் மண் கொட்டி ரோடு போட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குளத்திற்குள் தற்போது நீர் தேக்கமில்லை. வறண்டு கிடக்கும் குளத்தை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டு வந்தது. ஆனால், குளத்தை மூடும் நோக்கத்தில் மண் ெகாட்டி தற்காலிக ரோடு போட்டிருப்பதாக தெரிகிறது. குளத்தின் கரையின் ஒரு பகுதியை மூடி தார் ரோடு போட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது ெதாடர்பாக குடியிருப்பு மக்கள் கூறுகையில், ‘‘ குளத்தின் கரை அருகே வீடுகள் கட்டப்படுகிறது. குளத்தில் நீர் தேங்கினால் வீடுகள் மண்ணில் புதையும் அபாயம் உள்ளது. களிமண் பூமியில் அடுக்குமாடி வீடுகள் கட்டுவது சரியல்ல. வீடுகள் கட்டுவதற்காக நீர் ஆதாரத்தை அழிக்கும் வகையில் திட்ட பணிகள் நடத்தப்படுகிறது. இதை தடுக்கவேண்டியவர்கள் ஆதரவு தருவதால் முறைகேடு தொடர்கிறது, ’’ என்றனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை