×

தேனியில் நடந்தது மறு வாக்குப்பதிவு நடக்கும் பகுதியில் பூத் சிலிப் தயாரிக்கும் பணி தீவிரம்

தேனி, மே. 15: தேனி மாவட்டத்தில் மறுவாக்குப்பதிவு நடக்கும் இரு வாக்குச்சாவடிகளை சேர்ந்த வாக்காளர்களுக்கு பூத் சிலிப் தயாரிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி எண் 67க்கும், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டியில் வாக்குச்சாவடி எண் 197க்கும் வருகிற 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதள்படி இவ்விரு வாக்குச்சாவடி மையங்களுக்கும் வருகிற 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இவ்விரு வாக்குச்சாடிகளிலும் மொத்தம் சுமார் 2 ஆயிரத்து 500 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாக்காளர்கள் ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 18ம் தேதி வாக்களிக்கும்போது, இடது கையின் ஆள்காட்டி விரலில் மை வைத்தனர். தற்போது இவ்விரு வாக்குச்சாவடி மையஙகளிலும், மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளதால், வாக்காளர்களுக்கு பூத் சிலிப்கள் வழங்க வேண்டியுள்ளது. எனவே, இவ்விருவாக்குச்சாடிக்கும் பூத்சிலிப் தயாரிக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

Tags : Boat Chilip ,area ,re-polling ,Theni ,
× RELATED மறு வாக்குப்பதிவு நடந்த 11...