×

தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்

பண்ருட்டி, மே 15: பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அரசு மேனிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் புதுப்பேட்டை, பணப்பாக்கம், வரிஞ்சிபாக்கம், பண்டரக்கோட்டை, சேமகோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுமார் 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வகுப்புகளுக்கு ஏற்றவாறு ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியர் கடந்த ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்று தற்போது ஒரு மாதம் நீட்டிப்பில் இருந்து வருகிறார்.பள்ளி துவங்க உள்ள நிலையில் பிளஸ்1 சேர்க்கை விண்ணப்பம் வழங்க வேண்டும். புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காத்திருப்பதால் புதிய தலைமை ஆசிரியரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள்,பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : headmaster ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!