×

திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம்

புதுக்கோட்டை, மே 15: திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து ஸ்டாலின் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 2ம் கட்ட பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காலை தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பின் விமான நிலையம் அருகே உள்ள ராமச்சந்திராபுரத்தில் வீதி வீதியாக சென்று ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அங்கு கூடியிருந்த பெண்கள் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்த பெண்கள், ஸ்டாலினுக்கு பதநீர் கொடுத்தனர். அங்கிருந்து சாயர்புரம் அருகே உள்ள காமராஜ்நகர் சென்றார். அங்கு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பெண்கள் கூறுகையில், ‘சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லையென்றும், காமராஜ்புரத்தில் வேகத்தடை அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர். திமுக ஆட்சிக்கு வந்ததும் உங்களது அத்தனை கோரிக்கைகளும்  நிறைவேற்றி தரப்படும் என ஸ்டாலின் பதிலளித்தார். பின்னர் கூட்டாம்புளி காரனேசன் பகுதிக்குச் சென்ற ஸ்டாலின், அங்கு கூடியிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது இப்பகுதியில் குடிக்க ஆற்று குடிநீர்,  சாலைவசதி, பள்ளி கட்டிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வெண்டும் என்றனர். பின்னர் பிரசாரத்தை முடித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின், மறவன்மடம் தனியார் விடுதிக்கு சென்றார்.

   ஸ்டாலினுக்கு உற்சாகவரவேற்பு: தூத்துக்குடி  விமான நிலையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக  வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்  முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, கனிமொழி எம்.பி., மாவட்ட பொறுப்பாளர்கள்  (தெற்கு) அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, (வடக்கு) கீதாஜீவன் எம்எல்ஏ, நெல்லை  கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கோதை,  ஆஸ்டின், முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன், வேட்பாளர்கள் ஓட்டப்பிடாரம் சண்முகையா, விளாத்திகுளம் வசந்தம்  ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர்  ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன்  செல்வின், மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், மாநகர செயலாளர்  ஆனந்தசேகரன், முன்னாள் மேயர் கஸ்தூரிதங்கம், பகுதி செயலாளர்கள்  சுரேஷ்குமார், ரவீந்திரன், மதிமுக மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை வக்கீல்  செல்வம், மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் எம்.ஆர். மகேந்திரன், மாவட்ட  விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பேரூரணிசித்திரைச்செல்வன், வடக்கு மாவட்ட  இளைஞர் அணி அமைப்பாளர் சிஎம்மதியழகன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி  ஸ்டாலின், துணை அமைப்பாளர் புளாரன்ஸ், விவசாய தொழிலாளர் அணி துணை  அமைப்பாளர் எம்.ஏ.மாரியப்பன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோதிராஜா, மாவட்ட  தொழிலாளர் அணி அமைப்பாளர் புதூர் சுப்பிரமணியன், சாயர்புரம் நகர செயலாளர்  வரதராஜ் ஸ்டாலின், மகளிரணி துணை அமைப்பாளர் செல்வபாரதி, ஒன்றிய பிரதிநிதி  முடிவை ராமசாமி, ஊராட்சி செயலாளர் வெங்கடாசல மாரியப்பன், சரவணக்குமார்,  பரமன்குறிச்சி செயலாளர் இளங்கோ, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் மாடசாமி,  துணை செயலாளர் ஜெயராஜ், ராமச்சந்திரபுரம் திமுக பிரதிநிதி முப்பிலியன்,  விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,candidate ,Stalin Street Road ,campaign ,Shanmugha ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்