அறந்தாங்கி அருகே சுடுகாட்டில் கிராவல் மண் அள்ளியபோது எலும்புக்கூடு வெளியே வந்ததால் பரபரப்பு

புதுக்கோட்டை, மே 15: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி சுடுகாட்டு பகுதியில் அனுமதி இன்றி கிராவல் மண் வெட்டி எடுத்து போது எலும்பு கூடுகள் தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாயக்கர்பட்டி உள்ளது. இந்த பகுதியில் உள்ள சுடுகாட்டு பகுதியில் அனுமதியின்றி சிலர் கிராவல் மண் வெட்டிஎடுத்துள்ளனர். அப்போது புதைக்கப்பட்ட சடலத்தின் எலும்புக்கூடு வெளியே வந்தது. தகவலறிந்த அறந்தாங்கி தாசில்தார் சூரியபிரபு  சம்பவ இடத்திற்கு வந்து சென்று மணல் ஏற்றி இருந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார். சுடுகாட்டில் கிராவல் மண் அள்ளியபோது எலும்புக்கூடு தென்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>